close
Choose your channels

நீச்சல் குளத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. காஜல் அகர்வாலின் க்யூட் வீடியோ..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் தனது செல்ல மகனுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும் இவர் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. காஜல் அகர்வால் தனது மகனுக்குச் நீல் கிச்சுலு என்று பெயர் வைத்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது மகனுடன் நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். முதல் முதலாக நீச்சல் குளத்தை பார்த்த அவரது மகன் ஜாலியாக தனது அம்மாவுடன் ஆட்டம் போடும் வீடியோ ரசிகர்களின் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்காக அவர் குதிரை ஏற்றும் கள பயிற்சி ஆகியவை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் அவர் பிளாஷ்பேக் காட்சியில் 80 வயது பாட்டியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.