close
Choose your channels

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்: குவியும் லைக்ஸ்!

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்று பெயர் வைத்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தாலும் அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியாதவாறு இருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தையின் முகம் தெரியும் வகையில் ஒரு புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.