close
Choose your channels

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த திரைப்படம் ’செல்பி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் இருந்தன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 1 என அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அகிலமெங்கும் ஆர்ப்பரிக்க ’செல்பி’ ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் ஆட்கொள்ள வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், வர்ஷா பொம்மலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மதிமாறன் இயக்கி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos