அமைச்சர் அமித்ஷாவுக்கு கலைப்புலி எஸ்.தாணு எழுதிய கடிதம்!

சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அரசாணை தற்போது திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு இந்த அரசாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நீதிமன்றங்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 100% இருக்கைகள் குறித்த அரசாணையை திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திரையரங்குகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறைந்தபட்சம் வரும் பொங்கல் திருநாளில் உள்ள விடுமுறை நாட்களிலாவது 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே திரையுலகமும் திரையரங்கு உரிமையாளர்களும் நலிந்து இருக்கும் நிலையில் 100% இருக்கை அனுமதி என்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்து மத்திய அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எதிர்க்கட்சியின் உண்மை முகம் இதுதான்… வாக்குச் சேகரிப்பில் அதிரடியாகப் பேசிய தமிழக முதல்வர்!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் குடியேறிய இளம் தம்பதி!!! 9 மாதங்களுக்கு பிறகு வைரலாகும் வீடியோ!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கொரோனா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பரிசு தொகையா? இப்படியும் ஒரு விசித்திரம்!!!

கொரோனா நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து இருக்கிறது.

உடலுறவின்போது… மூச்சுதிணற வைப்பது கூட கிரிமினல் குற்றமா???

இங்கிலாந்து அரசாங்கம் பெண்களை மூச்சு திணற வைப்பது கூட கிரிமினல் குற்றம் என்பதற்கான புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக் காதலனை நேரில் சந்திக்க விரும்பிய பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் காதலனை நேரில் சந்திக்கச் சென்ற 17 வயது பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது