கபாலி' நஷ்டம் என திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டுவது ஏன்? தாணு விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட சமீபத்தில் வெளியான பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் அனைத்தும் விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்றும், இந்த படங்களின் வசூல் விபரங்கள் பொய்யானவை என்றும் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று மதுரை இம்ப்ரீயல் திரையரங்கு உரிமையாளர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் இதுகுறித்து விளக்கம் அளித்ததோடு, கபாலி படத்தை நஷ்டம் என்று அவர் கூறுவதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
"கபாலியின் வெற்றி குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன். உங்களுக்கு சந்தேகம் என்றால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவரங்களைத் தருகிறேன், அவர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கெதிரான சில குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஒரு விநியோகஸ்தராக, திரையரங்க உரிமையாளராக இருந்து அவர் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அவர் திரையரங்கு உரிமையாளர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளருக்கு 40-50 சதவித லாபத்தை மட்டுமே தந்து, மீதியை அவரே வைத்துக் கொள்கிறார் என சிலர் எங்களுக்கு சொன்னார்கள். மேலும், தான் விநியோகிக்கும் படங்களை திரையிடும் திரையரங்கிலிருந்து உணவு, முன்பதிவு கட்டணம், க்யூப் விளம்பரக் கட்டணம் என அனைத்து லாபத்திலிருந்தும் பங்கு எடுத்துக் கொள்கிறார்.
அடுத்து, கபாலியைப் பொருத்தவரை, திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி என எங்கிருந்தும் யாரும் பிரச்சினையை எழுப்பவில்லை. திருப்பூர் சுப்பிரமணியம் மட்டுமே இப்படி பேசி வருகிறார். ஏன்? அவருக்கு நான் கோவை பகுதி வெளியீட்டு உரிமையை தரவில்லை. அதனால்தான் எனக்கெதிராக தவறான விஷயங்களைப் பேசி வருகிறார்.
அவர்தான் முதலில் 'கபாலி' கோவை உரிமையை கேட்டு வந்தவர். 5 கோடிக்கு கேட்டார். ஆனால் வேறொருவர் 10 கோடிக்கு கேட்டதால் அவரிடம் கொடுத்துவிட்டேன். அப்போது கூட, உரிமையாளர்களிடம் 'கபாலி'யைத் திரையிட வேண்டாம் என்றும், அதிக விலைக்கு விற்றுவிட்டேன் என்றும் நிர்பந்தித்துள்ளார்.
என்னிடம் அவர் செய்த மலிவான செயல்களுக்கான ஆடியோ ஆதாரம் உள்ளன. கபாலி உரிமை கிடைக்காததால் வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கிளப்புகிறாரா என அவரிடம் கேளுங்கள்"
இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.

More News

பாவனா சம்பவத்திற்கு பின்னர் அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவத்திற்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நடிகர் பிரித்விராஜ்

பாலா-ஜோதிகா படத்தில் இணையும் பிரபல நடிகர்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

சிதம்பரம் கோவிலில் சிவராத்திரி கொண்டாடிய துப்பறிவாளன் டீம்

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது...

உலக அமைதிக்கு ஒரே தீர்வு யோகாதான். ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்துக்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான சிவராத்திரி தினமான நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது...

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவை ஸ்டைலிஷாக மாற்றிய பெருமை பெற்ற இயக்குனர் கவுதம் மேனன் அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்