20 தொகுதிகள் இடைத்தேர்தலை கமல்-ரஜினி பயன்படுத்துவார்களா?

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

இன்று காலை வெளிவந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற பரபரப்பான தீர்ப்பை 3வது நீதிபதி அளித்தார். இந்த தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதி மற்றும் ஏ.கே. போஸ் மறைவால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகள் காலியாக இருப்பதால் மொத்தம் தற்போது தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது.

இந்த 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக தவிர ஒரு புதிய கட்சியை அல்லது அணியை தமிழக மக்கள் விரும்புவதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில் ஒரு மினி பொதுத்தேர்தல் போல் நடக்கும் இந்த 20 தொகுதிகள் இடைத்தேர்தலை புதிய கட்சிகளும் ஏற்கனவே மக்களின் ஆதரவை பெற திணறி வரும் கட்சிகளும் பயன்படுத்தி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது

குறிப்பாக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசன் கட்சியும் விரைவில் ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் கட்சியும் இந்த இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்தி கொண்டால், வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கும், வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என கருதப்படுகிறது. கமல், ரஜினி ஆகிய இருவரும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

15 வயதில் பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணியின் மீடூ குற்றச்சாட்டு

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தனக்கு 15 வயது இருக்கும்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா அவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

'விஸ்வாசம்' செகண்ட்லுக் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த யானை

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக் இன்று காலை வெளிவந்து இணையதளங்களையும், சமூக வலைத்தளங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

சர்கார் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்

8 வருடங்களுக்கு பின் இரண்டாவது முறையாக விஜய் தவறவிட்ட விஷயம்

விஜய் நடித்த படங்கள் என்றாலே பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்த படமாகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததே.

மீடூ விவகாரம்: மெட்ராஸ் மியூசிக் அகாடமி எடுத்த அதிரடி நடவடிக்கை

உலகம் முழுவதும் மீடூ என்ற பாலியல் குற்றச்சாட்டு கடந்த ஒரு வருடங்