close
Choose your channels

'கமல்ஹாசன் 233' அதிகாரபூர்வ அறிவிப்பு.. வேற லெவலில் மாஸ் வீடியோ..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 233 வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோவை கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் இந்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எச் வினோத் இயக்கும் படத்தை முடித்தவுடன் மணிரத்னம் இயக்கவுள்ள கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment