close
Choose your channels

கமல்ஹாசன் வீட்டிற்குள் மீண்டும் புகுந்த கொரோனா: இம்முறை யாருக்கு தெரியுமா?

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் சில நாட்களில் அவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் அதன் பின்னர் அவர் தனது வழக்கமான பணிகளை கவனித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தான் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.