கமல்ஹாசனின் 'விக்ரம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது என்பதையும் பார்த்தோம். ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ‘விக்ரம்’ படத்தை கொண்டாடி வருகின்றன என்பதும் அனைத்து பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த படத்தின் வசூல் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் நாளில் ‘விக்ரம்’ திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளிலும் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகிவிட்ட நிலையில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் நல்ல வசூல் செய்யும் என்றும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுவரை வெளியான கமல்ஹாசன் படங்களிலேயே இந்த படம்தான் அதிக ஓபனிங் வசூல் குவித்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அட்லியின் 'ஜவான்' டீசரை பார்த்து சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

முதல் நாளே 'விக்ரம்' படத்தை மகளுடன் பார்த்த ஷாலினி அஜித்: என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும்

காதலரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான்: ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனு என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.

உங்க புரட்சி, புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? ஆர்கே சுரேஷின் 'காடுவெட்டி' டீசர்

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்த 'விசித்திரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

முதல் நாளே 'விக்ரம்' சக்சஸ் மீட்: கமலுக்கு நேரில் வாழ்த்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.