close
Choose your channels

முதல் நாளே 'விக்ரம்' சக்சஸ் மீட்: கமலுக்கு நேரில் வாழ்த்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு ஊடகம் கூட இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பதும், அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டி எழுதி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘விக்ரம்’ படம் வெற்றிப்படம் என்பது நிச்சயம் ஆகிவிட்டது

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை முதல் நாளை கொண்டாடிய தகவல் வெளியாகி உள்ளது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை முன்னிட்டு கமல்ஹாசனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை மலர்க்கொத்து அளித்து தெரிவித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல் சாரை நேரில் சந்தித்து
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் ‘விக்ரம்’ நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.