close
Choose your channels

கமல் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரமாட்டாரா? என்ன காரணம்?

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விட்டு அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்று ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் இருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியே வரப் போவதாகவும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டால் அவருக்கு பதிலாக சனி ஞாயிறுகளில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிலையில் அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதி பகுதிகளை தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் தொகுத்து வழங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்போம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தரப்பில் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.