இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து!

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து கூறியபோது, 'ஒரு இந்தியனாக அவரவர் மொழியை மதிக்க வேண்டும் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். எந்த மொழியையும் திணிக்க கூடாது என்பது என் கருத்து. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்

தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அது அச்சமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தேகமாக மட்டும் இருந்தால் போதும். இனிவரும் ஐந்து வருடத்தில் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனாக என்னுடைய ஆசை' என்று தெரிவித்தார்.

More News

காண்ட்ராக்டர் நேசமணிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார்

அஜித்தின் அரசியல் பார்வை குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்

அஜித்துக்கு அரசியல் பார்வை மட்டுமே இருப்பதாகவும், அரசியல் ஆசை இல்லை என்றும் பிரபல ஊடகவியலார் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?

சூர்யாவுடன் சாய்பல்லவி நடித்த 'என்.ஜி.'கே' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஏன் வீண் கலகம்? ஊடகங்களுக்கு நடிகர் பிரச்சன்னா கேள்வி!

மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற ரமேஷ் போகிரியால் நிஷாங் அவர்களிடம் புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு நேற்று அளிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சருக்கு பிரபல நடிகை பாராட்டு

பாரத பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது நிதியமைச்சராகவும் இருந்தார். ஆனால் நிதித்துறைக்கு என தனியாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றிருப்பது இதுதான் முதல்முறை.