close
Choose your channels

உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே..! பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

Thursday, January 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிரபல நடிகருக்கு ’உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ’ஜீரோ’ என்ற திரைப்படம் ஷாருக்கான் நடிப்பில் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும், இந்த படம் நல்ல வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகும் முன் தீபிகா படுகோனே அணிந்த ஆடை பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே. ஆனால் எதிர்ப்பையும் மீறி, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வெளியான ’பதான்’ திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் ’பதான்’ படம் குறித்த சிறந்த தகவல்களை கேட்டு வருகிறேன், இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள், உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே’ என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுடன் ஷாருக்கான் ‘ஹேராம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.