close
Choose your channels

ஒரே புகைப்படத்தில் கமல், ராஜமெளலி, லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன்: என்ன திட்டம்?

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல இயக்குனர்கள் எஸ்எஸ் ராஜமெளலி, கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பின்  புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தை பிரித்விராஜ் சுகுமாரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னணி ஊடகமொன்றுக்கு கமல்ஹாசன், எஸ்எஸ் ராஜமெளலி, லோகேஷ் கனகராஜ் ,பிரித்திவிராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் பேட்டி கொடுக்கும் போது எடுத்த புகைப்படம் தான் இந்தப் படம் குறித்து என கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை ,பிரித்விராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களுக்குள் சுமார் மூன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘தளபதி 67’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அந்த படத்தில் கமல்ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன், கௌதம் மேனன் ஆகியோர் இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment