கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கட்சியில் இருந்து வெளியேறிய கமீலா நாசர்: காரணம் இதுதான்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிய பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனுக்கு தற்போது தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் நடிக்கும் திரைப்படம் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16-ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசர் மகன் அபிஹாசனுடன், அசோக் செல்வன், ரேயா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கமல்ஹாசனுக்கும் தனுஷுக்கும் தனது நன்றியை கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிப்புலகின் ஆசான் கமல்ஹாசன், நடிப்பில் அசுரன் தனுஷ் இருவரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி! இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசரின் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
 

More News

முதல் படமே பிரபல நடிகை கூட.....! அல்லு அர்ஜுன் மகளின்  அசத்தல் அறிமுகம்.....!

நடிகை சமந்தாவின் திரைப்படத்தில், அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா அறிமுகமாக உள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்!

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மற்றும் சினிமா எனும் இரண்டு விஷயத்திற்குத்தான்

முன்னாள் காக்கி, இந்நாள் சங்கி....! அண்ணாமலை குறித்து பாஜகவினர் நக்கல் பேச்சு....!

முன்னாள் காக்கி, இந்நாள் சங்கி....! அண்ணாமலை குறித்து பாஜகவினர் நக்கல் பேச்சு....!

ஒலிம்பிக்கில் பங்குபெறும், தம்பி, தங்கைகள் வெற்றிவாகை சூட வேண்டும்....! சீமான் வாழ்த்து அறிக்கை....!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 13 தம்பி, தங்கைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் வெற்றிவாகை சூடி வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனரைப் பார்த்து பொறாமைபடும் சுந்தர் பிச்சை… என்ன காரணம்?

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் மீது, கொஞ்சம் பொறாமை படுவதாக கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல் தலைவராக இருந்துவரும் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.