close
Choose your channels

பட்டாசு வெடிக்க தடை: பிரபல நடிகையின் கிண்டல் பதிவு!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களுடைய வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லட்டும் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளித் திருநாளின் போது மட்டும் திடீர் என சமூக ஆர்வலர்கள் தோன்றி பட்டாசுகள் வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் பட்டாசு வெடிப்பதை எதிர்க்க மாட்டார்கள் என்பதும் தேர்தல் வெற்றியின் போது அரசியல் கட்சியினர் வெடிக்கும் பட்டாசுக்கு எந்தவித தடையும் கேட்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்லட்டும் என பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கிண்டலுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் இது குறித்து சத்குரு அவர்களின் வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.