close
Choose your channels

பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கங்கனா ரனாவத்.. இயக்குனர் யார் தெரியுமா?

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் ஹீரோ நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் என்பதும் இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்தது. அது மட்டும் இன்றி தற்போது அவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல தமிழ் ஹீரோக்களில் ஒருவர் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அயோத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.