கார்த்தியின் 'தேவ்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

'கடைகுட்டி சிங்கம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கடந்த ஆண்டு கொடுத்த கார்த்தி நடித்து வரும் அடுத்த படம் 'தேவ்'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

More News

பிரியா வாரியர் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய அஜித் தயாரிப்பாளர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், 'கண்சிமிட்டல்' புகழ் பிரியாவாரியர் நடிக்கும் படத்தின் குழுவினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த பட டைட்டில் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும்

4வது முறையாக ரஜினி படம் செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருந்து வருவதால் விநியோகிஸ்தர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்

உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கட்-அவுட், பேனர் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும்போது கட் அவுட், பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது என்பது ரசிகர்களால்