close
Choose your channels

பிரியா வாரியர் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய அஜித் தயாரிப்பாளர்

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், 'கண்சிமிட்டல்' புகழ் பிரியாவாரியர் நடிக்கும் படத்தின் குழுவினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள படம் ஒன்றின் டீசரில் 'கண்சிமிட்டியதால்' இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர் நடித்து வரும் படம் 'ஸ்ரீதேவி பங்களா'. இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகியது.

இந்த டீசரில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்த காட்சி இருப்பதாக தெரிகிறது.  தன்னுடைய அனுமதி இல்லாமல் ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போனிகபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போனிகபூர் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளார் என்பதும், அந்த இரண்டு படங்களையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.