கார்த்தியின் அடுத்த பட நாயகி சமந்தாவா? எந்த படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 30 2022]

கார்த்தியின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா நாயகி என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’விருமன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும், தற்போது அவர் ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கியிருப்பவர் சதீஷ் செல்வகுமார் என்றும் இவர் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ என்ற வெற்றி படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு கூட நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் இயக்குனர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

விஜய் சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த அடுத்த  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு சம்பளம் இவ்வளவா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்

'புஷ்பா' போஸ்டரை குறிப்பிட்டு போலீஸார் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!

சமீபத்தில் வெளியான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும்

நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன? சமுத்திரக்கனியின் 'பப்ளிக்' வீடியோ

நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன? என்ற வசனத்துடன் சமுத்திரக்கனி நடித்த 'பப்ளிக்' என்ற திரைப்படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. 

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கில் இந்த சூப்பர் நடிகரா?

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.