close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு சம்பளம் இவ்வளவா?

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் சிலரின் பெயர்கள் ஹாட்ஸ்டார் ஓடிடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மொத்த போட்டியாளர்களின் விவரத்தை தற்போது பார்ப்போம்.

சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனே, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகிய 14 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உரிய சம்பளம் குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது. சினேகனுக்கு நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சம்பளமாகவும், வனிதா விஜயகுமாருக்கும் அதே சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூலிக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் சம்பளம் எனவும், தாடி பாலாஜிக்கு 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தவிர மற்ற போட்டியாளர்களுக்கு அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது வாங்கிய சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்களில் பட்டையை கிளப்பிய போட்டியாளர்கள் கலந்து கொண்டிருப்பதால் காரசாரமான சம்பவங்களுக்கு குறையே இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.