'ஜிகர்தண்டா 2' படத்தில் யார் யார்? செம வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ’ஜிகர்தண்டா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டு இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பது இன்று வெளியாகியுள்ள மூன்று நிமிட டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் இருவரின் கெட்டப் மற்றும் நடிப்பு அட்டகாசமாக உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு முகமது அலி படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று நிமிட டீசர் வீடியோ மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களா?  ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்த 66ஆவது திரைப்படமான 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 67வது  திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக

இங்கெல்லாம் நீதி கிடைக்காது, போலீசுக்கு போங்க.. பாலியல் புகார் குறித்து பிரபல நடிகை

 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் திரைப்பட சங்கங்களில் புகார் கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும்

விஜே மகாலட்சுமியின் மாத வருமானம் இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட விஜே மகாலட்சுமிக்கு மாத வருமானம் லட்சக்கணக்கில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பம். பிரபல யூடியூபரின் போட்டோஷூட் வைரல்

பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆனதை அடுத்து இரண்டு மனைவிகளுடன் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

ஜிவி பிரகாஷின் அடுத்த படம் அறிவிப்பு.. நாயகி இந்த பிரபல நடிகையா?

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் அவர் தற்போது இசையமைப்பாளராகவும் பிஸியாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.