close
Choose your channels

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களா?  ஆச்சரிய தகவல்!

Sunday, December 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 66ஆவது திரைப்படமான ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுவது. ஏற்கனவே இந்நிறுவனம் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தளபதி 68’ படத்தை சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.