close
Choose your channels

'பேருதான் தெரியும், ஆள் யாருன்னு தெரியாது':  கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டீசர்!

Monday, March 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த திரைப்படம் ’பபூன்’. வைபவ், அனைகா, நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் இந்த படத்தின் பல காட்சிகள் த்ரில்லிங்காக உள்ளன என்பதும் இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.