'காசேதான் கடவுளடா' பாடல் படத்தில் எப்போது? 'துணிவு' படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இந்த மூன்று பாடல்களும் எந்தெந்த பகுதியில் படத்தில் இடம்பெற இருக்கிறது என்ற தகவல் தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்துள்ளது.

அனிருத் பாடிய ’சில்லா சில்லா’ என்ற பாடல் அஜித்தின் அறிமுக காட்சியில் இடம்பெறும் பாடலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் ’கேங்க்ஸ்டா’ என்ற பாடல் வங்கி கொள்ளை காட்சிகளின் போது பின்னணியாக ஒலிக்கும் என்றும் ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் படம் முடிவடைந்து டைட்டில் போடும்போது இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மூன்று பாடல்களுமே ஏற்கனவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், பகவதி பெருமாள், சமுத்திரக்கனி, பிரேம்குமார், சிபி, ஜிபி முத்து, அமீர், பாவனி ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' போட்டியாளருக்கு ஜோடியாகும் வரலட்சுமி: ரிலீஸ் தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பெரிய ஹிட் ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்.. நேரடியாக இறுதிக்கு தகுதி பெறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 15 நாட்களே மீதமிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவின் லிப்லாக்.. கொடுத்து வைத்த அந்த நபர் யார்?

புத்தாண்டு கொண்டாட கோவா சென்ற நடிகை தமன்னா அங்கு தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் அதிர்ஷ்டசாலி யார்

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்!

'கேஜிஎஃப் 1', 'கே ஜி எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே

50 ஆண்களை ஏமாற்றிய திருமண ராணி.. அதிர்ச்சியில் 51வது கணவர்!

கீழக்கரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி 50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.