close
Choose your channels

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவின் லிப்லாக்.. கொடுத்து வைத்த அந்த நபர் யார்?

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புத்தாண்டு கொண்டாட கோவா சென்ற நடிகை தமன்னா அங்கு தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் அவரது பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் தெரிந்ததே. தமிழில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 33 வயதான தமன்னா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் புகைப்படம் வீடியோக்கள் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை தமன்னா விஜய் வர்மாவுடன் புத்தாண்டு கொண்டாட கோவா சென்றுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற புத்தாண்டு பார்ட்டியில் இருவரும் கட்டிப்பிடித்து லிப் லாக் முத்தம் கொடுத்துக்கொண்டே வீடியோ இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விரைவில் தமன்னா - விஜய் வர்மாதிருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த ஹன்சிகா உள்பட ஒரு சில நடிகைகளின் திருமணம் கடந்த ஆண்டு நடந்த நிலையில் இந்த ஆண்டு தமன்னாவின் திருமணம் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.