close
Choose your channels

உங்களால நாங்க நல்லா இருக்கணும், உங்களவிட நல்லா இருந்துடக்கூடாது.. கவினின் 'டாடா' டிரைலர்..!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் இந்த ட்ரெய்லர் வைரல் ஆகி வருகிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் இடையே ஏற்படும் காதல் காரணமாக திடீரென அபர்ணா தாஸ் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விடுகிறார். அதன் பிறகு ஏற்படும் குழப்பங்கள் திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லர் இருந்து தெளிவாக இருக்கிறது.

கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இருவருமே ரொமான்ஸ் மட்டுமின்றி சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பில் அசத்தியுள்ளனர். இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணேஷ் பாபு இயக்கத்தில் ஜென்மார்ட்டின் இசையில் எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஸ் அழகேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் இதனால் இந்த படம் நல்ல விளம்பரத்தை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment