சிம்பு-சீமான் படத்தின் தயாரிப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

இயக்குனர், நடிகர், அரசியல்வாதியான சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ஒரு பரபரப்பான அரசியல் கலந்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படம் குறித்தும், சிம்பு குறித்தும் சீமான் பேசியபோது, ''தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை சொல்லிட்டேன். ஆனா, பயந்துட்டாங்க. 'நான் நடிக்கிறேன்’ அண்ணா என்று சிம்பு சொன்னார்’’ என்று கூறியதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சிம்பு-சீமான் இணையும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து முடித்துவிட்ட சிம்பு, விரைவில் வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

More News

'கனா' வெற்றி விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை

சமீபத்தில் நடைபெற்ற 'கனா' வெற்றி விழாவில் பேசிய படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், 'நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடி வருவதாகவும்

ரஜினி-அஜித்துடன் போட்டி போட தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்துடன் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடித்த 'எல்.கே.ஜி' படத்தையும் வெளியிட திட்டம்

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' குறித்த முக்கிய தகவல்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும்,

தமிழக அரசின் உத்தரவால் 'பேட்ட', விஸ்வாசம்' படங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக உள்ளார்.