close
Choose your channels

சிம்பு-சீமான் படத்தின் தயாரிப்பாளர் யார்?

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர், நடிகர், அரசியல்வாதியான சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ஒரு பரபரப்பான அரசியல் கலந்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படம் குறித்தும், சிம்பு குறித்தும் சீமான் பேசியபோது, '`தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை சொல்லிட்டேன். ஆனா, பயந்துட்டாங்க. `நான் நடிக்கிறேன்’ அண்ணா என்று சிம்பு சொன்னார்’’ என்று கூறியதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சிம்பு-சீமான் இணையும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து முடித்துவிட்ட சிம்பு, விரைவில் வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.