close
Choose your channels

ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து செல்பி எடுத்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. யாரை தெரியுமா?

Thursday, November 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் தன்னுடைய நெருங்கிய தோழியை கட்டிப்பிடித்து நடிகை கீர்த்தி சுரேஷ் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் அவர் தற்போது ’மாமன்னன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு கீர்த்தி சுரேஷ் சென்றபோது அங்கு பிரபல பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூரை பார்த்து அவரை கட்டிப்பிடித்து அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் நெருக்கமான தோழிகளாக இருந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் எதிர்பாராத வகையில் தனது தோழியை பார்த்த கீர்த்தி சுரேஷ் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’மாமன்னன்’, ஜெயம் ரவி நடித்து வரும் ‘சைரன்’ ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் சிரஞ்சீவியின் ‘போலோ சங்கர்’, நானியின் ‘தசரா’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் அவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’தளபதி 67’ படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment