close
Choose your channels

'வீட்டில் இருந்து தான் புரட்சி தொடங்குகிறது': கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் டைட்டில்!

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படத்தை 'கேஜிஎப்’ தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’ரகு தாத்தா’ என வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தை சுமன் குமார் என்பவர் இயக்குகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்,’ ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.