'தளபதி 63' படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்?

  • IndiaGlitz, [Thursday,January 17 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் இணைந்த ஒருசில நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை சமீபத்தில் பார்த்தோம். குறிப்பாக 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக் ஆகியோர் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் அட்லி படம் என்றாலே இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் இருப்பது வழக்கம் என்பதால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் மற்றும் நடிகை ஆத்மிகா ஆகிய இருவரும் இணையவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரஜினி-விஷால் திடீர் சந்திப்பு! ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று சந்தித்து பேசியதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடன் இருந்தார்.

இன்றிரவு 7 மணிக்கு ஓவியாவுக்காக சிம்பு தரும் இசை விருந்து

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று '90ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

'விஸ்வாசம்' அஜித்துக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு

பொங்கல் விருந்தாக கடந்த 10ஆம் தேதி வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சூர்யாவின் 'காப்பான்' படத்தின் முக்கிய அப்டேட்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடந்து வந்தது

உலகின் முதல் அணையை கட்டிய தமிழன்: சூரி வெளியிட்ட மோஷன் போஸ்டர்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ''கடைக்குட்டி சிங்கம்' வெற்றிப்படத்தின் இணை இயக்குநர் M.S.ராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'உறங்காப்புலி'.