close
Choose your channels

உலகின் முதல் அணையை கட்டிய தமிழன்: சூரி வெளியிட்ட மோஷன் போஸ்டர்

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றிப்படத்தின் இணை இயக்குநர் M.S.ராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'உறங்காப்புலி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன்போஸ்டரை நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகின் முதல் அணையை கட்டியவன் தமிழன், உலகில் முதல்முறையாக தேர்தலை அறிமுகப்படுத்தியவன் தமிழன், ஒவ்வொரு தமிழனும் 'உறங்காபுலி' என்ற வாசகங்களுடன் வெளிவந்துள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

M.S.ராஜ் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அல் ரூஃபியான் இசையமைத்து வருகிறார். கேகே ஒளிப்பதிவில் அலெக்ஸ் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.