close
Choose your channels

'தளபதி 63' படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்?

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் இணைந்த ஒருசில நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை சமீபத்தில் பார்த்தோம். குறிப்பாக 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக் ஆகியோர் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் அட்லி படம் என்றாலே இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் இருப்பது வழக்கம் என்பதால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் மற்றும் நடிகை ஆத்மிகா ஆகிய இருவரும் இணையவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.