close
Choose your channels

நயன்தாரா மும்பை சென்றது இதற்காகத்தானா? வைரல் வீடியோ!

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் இருந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் எதற்காக மும்பை சென்றார் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து தனது காரில் ஏறி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘லயன்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தான் நயன்தாரா மும்பை சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே லயன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காகத்தான் நயன்தாரா மும்பை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.