'மீடூ' குறித்து லதா ரஜினிகாந்த் கூறிய கருத்து

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கி வைத்த மீடூ விவகாரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கி தினமும் பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மீடூ விவகாரத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி இருந்து கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

மீடூ குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து அவரவர் தான் பேச வேண்டும். அதை நாம் பேசினால் நன்றாக இருக்காது. யார் மனதையும் யாரும் கெடுக்காமல், யாருக்கும் யாரும் தீங்கும் செய்யாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு தயவுசெய்து அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம்' என்று அதனை லதா ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்தியின் 17வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் சற்றுமுன் கார்த்தி நடித்து வரும் 17வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்

20 தொகுதிகள் இடைத்தேர்தலை கமல்-ரஜினி பயன்படுத்துவார்களா?

இன்று காலை வெளிவந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற பரபரப்பான தீர்ப்பை 3வது நீதிபதி அளித்தார்.

15 வயதில் பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணியின் மீடூ குற்றச்சாட்டு

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தனக்கு 15 வயது இருக்கும்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா அவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

'விஸ்வாசம்' செகண்ட்லுக் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த யானை

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக் இன்று காலை வெளிவந்து இணையதளங்களையும், சமூக வலைத்தளங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

சர்கார் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்