வர்றேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ஆயுத பூஜை திருவிழாவில் லெஜண்ட் சரவணன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆட்டோ ஓட்டுனர் நடத்திய ஆயுத பூஜை திருவிழாவில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
பிரபல தொழில் அதிபரும் ’லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து தயாரித்தவருமான லெஜண்ட் சரவணன் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
அதன் பிறகு அவர் பேசிய போது ’எனக்கு இரண்டு விஷயங்கள் ரொம்ப சந்தோஷமாக தோன்றும். ஒன்று நன்றாக ஓடி ஆடி உழைக்க வேண்டும். இன்னொன்று மற்றவர்களுக்கு அன்பை வாரி வழங்குவது. ஏனெனில் நாம் எதை விதைக்கிறோமோ, அதுதான் நமக்கு பன்மடங்கு திரும்பி கிடைக்கும்.
ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் அன்பை வாரி இறைக்க வேண்டும், மனிதநேயம் பெருக்க வேண்டும். நீங்கள் எத்தனை மடங்கு மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறீர்களோ, அதைவிட பல மடங்கு உங்களுக்கு அன்பு கிடைக்கும். எனவே மனித நேயம் தழைக்க, நாம் எல்லோரும் இன்றைக்கு ஒற்றுமையாக இருந்து அன்பை ஒரு பாலமாக வைத்து அரவணைப்போம் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் எங்களுடன் நீங்கள் சில நிமிடங்கள் ஆட்டோவில் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் கண்டிப்பாக வருகிறேன், ஆனால் ஒரு கண்டிஷன், நான் தான் ஆட்டோவை ஓட்டுவேன் என்று கூறினார். இதனை அடுத்து லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டிய காட்சியுடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்டோ ஓட்டிய ‘லெஜண்ட்’@yoursthelegend #TheLegend #LegendSaravanan pic.twitter.com/QRQSUPIiXd
— Nikil Murukan (@onlynikil) October 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments