புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாரா?

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

பிரபல தொழில் அதிபரும் 'தி லெஜண்ட்’ என்ற படத்தை தயாரித்து நடித்தவருமான லெஜண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் அடுத்த படத்திற்கு தயார் ஆகி விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அதை அடுத்து சமீபத்தில் ஓடிடியில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருவதாகவும் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென வித்தியாசமான கெட்டப்புக்கு மாறிய லெஜண்ட் சரவணன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த கெட்டப்பை பார்த்து லெஜண்ட் சரவணன் இதே கெட்டப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர் இவர் தானாம்.. அப்ப இயக்குனர் அட்லி இல்லையா?

தளபதி விஜய் நடித்து வரும் 67-வது திரைப்படம் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று

மனைவி குழந்தைகளுடன் நடிகர் ரகுமான்.. ரம்ஜான் கொண்டாடிய க்யூட் புகைப்படங்கள்..!

 தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான ரகுமான் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல்

'நாட்டாமை' டீச்சர் நடிகை ராணியா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சரத்குமார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'நாட்டாமை' திரைப்படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் 'அயலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பண்டிகை நாளில்  செம்ம   விருந்து..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்'. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு

சாதி பெயரை சொல்லி திட்டினார், காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்.. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கூறி மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அவர் தன்னுடைய சாதி பெயரை சொல்லி திட்டினார்