close
Choose your channels

புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாரா?

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழில் அதிபரும் 'தி லெஜண்ட்’ என்ற படத்தை தயாரித்து நடித்தவருமான லெஜண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் அடுத்த படத்திற்கு தயார் ஆகி விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அதை அடுத்து சமீபத்தில் ஓடிடியில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருவதாகவும் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென வித்தியாசமான கெட்டப்புக்கு மாறிய லெஜண்ட் சரவணன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த கெட்டப்பை பார்த்து லெஜண்ட் சரவணன் இதே கெட்டப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.