close
Choose your channels

ஓடிடிக்கு வருகிறதா 'தி லெஜெண்ட்': தொழிலதிபர் சரவணன் டுவிட்!

Sunday, January 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் பல ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் தி லெஜெண்ட்’ படத்தை அடுத்து, அடுத்த படத்திற்காக சரவணன் தயாராகி வருவதாகவும், இந்த படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவரது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.



இந்த நிலையில் தி லெஜெண்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் ஓடிடியில் இந்த படம் வெளியாகவில்லை என என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை அடுத்து சற்றுமுன் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜெண்ட்’ விரைவில்’ என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.