close
Choose your channels

'தளபதி 67' படம் குறித்த முக்கிய தகவலை கூறிய லோகேஷ் கனகராஜ்!

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் 61 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அஜித்தின் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து விட்டதைப் போலவே தளபதி விஜய்யின் 66 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தளபதி விஜய்யின் 67வது படம் குறித்த தகவல் கசிந்தது என்று ஏற்கனவே பார்த்தோம். மேலும் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பா ரஞ்சித்தின் ‘குதிரைவால்’ படத்தை காணவந்த லோகேஷ் கனகராஜிடம் செய்தியாளர்கள் ‘தளபதி 67’ படம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தளபதி 67’ படத்தின் வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறினார். மேலும் இந்த படம் உறுதி செய்யப்பட்டவுடன் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் தான் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ’மாஸ்டர்’ கூட்டணி இணையவிருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.