close
Choose your channels

விஜய்-லோகேஷ் படத்தில் LCU? ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய தகவல்!

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திலும் LCU இருக்கும் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்களின் ஆச்சரியமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் இந்த படத்தில் ’கைதி’ படத்தின் சில காட்சிகள் இடம் பெற்றதை அடுத்து இனி அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் படங்களில் LCU இடம்பெறும் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியபோது LCU என்பது மக்கள் கொடுத்த பெயர் என்றும் இனி வரும் காலங்களில் எனது அடுத்தடுத்த படங்களில் முந்தைய படங்களின் கதா பாத்திரங்களை பயன்படுத்தும் LCU முறை இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்திலும் லோகேஷ் கனகராஜின் LCU இருக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை ஆனால் அதே நேரத்தில் ஆமாம் என்று கூறவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தில் ’மாஸ்டர்’ படத்தில் உள்ள கேரக்டர் அல்லது ’கைதி’ படத்தில் உள்ள கேரக்டர் இணைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos