'மாஸ்டர்' டெக்னிக்கை 'லியோ'விலும் பயன்படுத்தும் லோகேஷ் கனகராஜ்: மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் பயன்படுத்திய டெக்னிக்கை 'லியோ’ படத்திலும் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் அவர் சிறு கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அதே டெக்னிக்கை தற்போது 'லியோ’ படத்திலும் அவர் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு திரைபடத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உட்பட பல இயக்குனர்கள் தமிழ் திரை உலகில் நடிகர்களாகவும் ஜொலித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் முழு நேர நடிகராக லோகேஷ் கனகராஜ் மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சூர்யாவின் 'கங்குவா' டிஜிட்டல் உரிமை வியாபரம் மட்டும் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் சரித்திர கால காட்சிகள்

மேக்கப் இல்லாமல் நடிகை நிரோஷா.. ரசிகர்களின் மலரும் நினைவுகள்..!

நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் பதிவு செய்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது மலரும் நினைவுகளின் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 

பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஹானா படம்: நடிகர் கார்த்தி என்ன ட்விட் போட்டிருக்கார் பாருங்கள்..!

ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் உள்பட பலர் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

காஜல் டூ காஜல்… ஹபிக்கு முத்தம் கொடுத்து நடிகை காஜல் அகர்வால் துவங்கிய புது நிறுவனம்!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை காஜல் அகர்வால் அழகுசாதன நிறுவனம்

சோஷியல் மீடியாவை விட்டு நடிகை நஸ்ரியா விலகல்… காரணம் தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்!

தனது க்யூட் ரியாக்சன் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகையாக இருந்துவரும் இளம் நடிகை நஸ்ரியா நஜிம்