close
Choose your channels

சூர்யாவின் 'கங்குவா' டிஜிட்டல் உரிமை வியாபரம் மட்டும் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்..!

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் சரித்திர கால காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக போடப்பட்ட செட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கங்குவா’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 80 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

உலகின் முன்னணி டிஜிட்டல் நிறுவனம் ‘கங்குவா’ படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளின் உரிமையை ரூபாய் 80 கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகும் இந்த படம் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே மிகப்பெரிய தொகையை வியாபாரம் செய்துவிட்டது கோலிவுட் திரை உலகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.