close
Choose your channels

பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஹானா படம்: நடிகர் கார்த்தி என்ன ட்விட் போட்டிருக்கார் பாருங்கள்..!

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் உள்பட பலர் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு மதத்துக்கு எதிரான படம் என்று ஒரு சிலர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தாலும் படக்குழுவினர் மீண்டும் மீண்டும் இது எந்த மதத்திற்கும் எதிரான படம் அல்ல என்றும் அழுத்தமான கதை அம்ச மற்றும் ஆழமான சமூக கருத்துக்கள் கொண்ட படம் என்றும் தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் நேற்று திருவாரூரில் உள்ள திரையரங்கில் கடும் எதிர்ப்புக்கு காரணமாக ஃபர்ஹானா திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

பொருளாதாரம், தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை குடும்ப உறவில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் நிலையில் அதற்கு எதிரான படமாகத்தான் ஃபர்ஹானா உள்ளது. இந்த விவகாரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்த படம் கையாண்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வ ராகவன், கிட்டி ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.