திருமணம் குறித்து லாஸ்லியா தெரிவித்த முக்கிய தகவல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இருப்பினும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் தமிழகத்தில் அவரது எதிர்காலம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பிறந்த கனடாவில் வளர்ந்த லாஸ்லியாவை கோலிவுட் திரையுலகம் விரைவில் வரவேற்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை ரொம்பவே திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த லாஸ்லியா, ‘என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். எனவே அவர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். இருப்பினும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்

மேலும் ‘என் அப்பா என்னை என்ன திட்டினாலும் அவர் என் அப்பா. எங்களுக்குள் எந்த உறவுச் சிக்கலும் கிடையாது. என் நன்மைக்காகவே அவர் பேசியுள்ளார். அவரது சமூகம் அவரை எப்படி நடத்தியது? எனத் தெரியவில்லை. அவர் ரொம்ப பாசமாக இருப்பார்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
 

More News

வெற்றிமாறன் சார்பில் நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்: பாரதிராஜா

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கம்போல் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பிரபல இசையமைப்பாளரின் மகனை பாடகராக்கும் டி.இமான்!

குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களின் இசையமைப்பாளர் டி.இமான் என்று கூறும்  அளவிற்கு டி.இமான் சமீபகாலமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார்.

மத்திய அரசிடம் பாரதிராஜா விடுத்த வேண்டுகோள்!

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் கண்டித்து வருகின்றனர்.

'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்!

சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 70 வயது கிழவியான லட்சுமி, 20 வயது சமந்தாவாக

கருணாஸ் வேண்டுகோள்: சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. நீண்ட ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் இந்த படம் வெளிவந்து வசூல் மழையை