close
Choose your channels

கருணாஸ் வேண்டுகோள்: சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய வெற்றிமாறன்

Tuesday, October 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. நீண்ட ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் இந்த படம் வெளிவந்து வசூல் மழையை அள்ளி வருவதால் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பு தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷின் மகனாக முக்கிய கேரக்டரில் நடித்த கென் என்ற நடிகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் நடிகர் நடிகர் கருணாஸ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகனுக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்து இருப்பினும் இந்த படத்தில் உள்ள ஒரு வசனத்தை நீக்க வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறனுக்கு கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த படத்தில் ’ஆண்ட பரம்பரை’ என்ற ஒரு வசனம் வருவதாகவும் இந்த வசனம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக இருப்பதால் அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருணாஸின் கோரிக்கையை இயக்குனர் வெற்றிமாறன் ஏற்றுக்கொண்டு அந்த வசனம் வரும் காட்சியில் மியூட் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் ’ஆண்ட பரம்பரை’ என்ற வசனம் பல இடங்களில் வந்தபோது, கருணாஸ் இந்த எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.