close
Choose your channels

த்ரிஷா படத்தை ரீமேக் செய்ய விரும்பும் மாதவன்

Thursday, July 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷா நடிப்பில் இயக்குனர் மாதேஷ் இயக்கிய 'மோகினி' திரைப்படம் நாளை முதல் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், த்ரில் மற்றும் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மாதேஷை சந்தித்த மாதவன், 'மோகினி' படத்தின் கதையை கேட்டு ஆச்சரியம் அடைந்தாராம். இந்த படத்தை இந்திக்கு தகுந்தவாறு மாற்றி ஸ்கிரிப்ட் தயார் செய்தால், இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக மாதவன் தெரிவித்ததாக மாதேஷ் கூறியுள்ளார். த்ரிஷா கேரக்டரை ஆண் கேரக்டராக மாற்றி அதில் மாதவன் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'இறுதிச்சுற்று', மற்றும் 'விக்ரம் வேதா' வெற்றியை தொடர்ந்து மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும், 'மாறா' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment