close
Choose your channels

ஐபிஎல் ஸ்டாருடன் இணைந்த நடிகை அமலாபால்

Thursday, July 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்டார் வர்ணனையாளராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமீர் கோச்சார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணி செய்து அதன் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்ப்படம் ஒன்றிலும் நடிக்க சமீர் கோச்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த படம் தான் 'அதோ அந்த பறவை போல' என்ற திரைப்படம். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அமலாபாலுக்கு ஜோடியாக சமீர் கோச்சார் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

இந்த படத்தை கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த மகளிர் தினத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.