சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கின்றார்

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் தற்போது சிம்புவின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் 2 பிரபலமுமான மகத் இணைந்துள்ளார். இந்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள மகத், இதுகுறித்த விபரங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ரித்விகாவிடம் தான் சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக மகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான விஷ்ணுவிஷாலின் சைக்கோ த்ரில்லிங் படமான 'ராட்சசன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த தந்திரத்தை வேற எங்காவது காட்டுங்க: வைரமுத்துக்கு பதிலடி கொடுத்த பெண் பத்திரிகையாளர்

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் முந்தி கொண்டு கருத்து சொல்லும் ஒருசிலர் இந்த விஷயம் குறித்து மெளனமாக இருந்தாலும்

வைரமுத்துவின் விளக்கத்திற்கு சின்மயி ரியாக்சன்

பெண் பத்திரிகையாளர், பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கவியரசர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில்

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய அப்டேட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து அளித்த பதில்

கடந்த இரண்டு நாட்களாக கவியரசர் வைரமுத்து மீது ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.